சினிமா செய்திகள்
கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படம் - படக்குழு வெளியிட்ட வீடியோ..!
சினிமா செய்திகள்

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படம் - படக்குழு வெளியிட்ட வீடியோ..!

தினத்தந்தி
|
27 Oct 2023 11:16 PM IST

படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படம் கடந்த 1987-ம் ஆண்டு வெளியானது. அந்த படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இதன் பிறகு சுமார் 35 ஆண்டுகள் கழித்து தற்போது மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது.

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 1987-ல் வெளியான 'நாயகன்' படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து '2023' என குறிப்பிட்டு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரீகர் பிரசாத், ரவி கே.சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


மேலும் செய்திகள்